ஆயத பூஜை தொடர் விடுமுறை; ரயில்களில் முன்பதிவு தொடக்கம்

52பார்த்தது
ஆயத பூஜை தொடர் விடுமுறை; ரயில்களில் முன்பதிவு தொடக்கம்
ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி ரயில்களின் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்தாண்டு ஆயுத பூஜை வரும் அக்டோபர் 11ம் தேதியும் (வெள்ளிக்கிழமை), விஜயதசமி அக்டோபர் 12ம் தேதியும் (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. 13ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை உள்ளது. அதன்படி, அக்டோபர் 9ம் தேதிக்கு புறப்படுவோர் இன்று (11ம் தேதி) முன்பதிவு செய்து கொள்ளலாம். அக்டோபர் 10ம் தேதி செல்வோர், நாளையும், அக்டோபர் 11ம் தேதிக்கு 13ம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி