சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் விஜயவாடா வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் அமோக வரவேற்பளித்தனர். ஆந்திர மாநில முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கேசரப்பள்ளியில் நாளை (ஜூன் 12) காலை 11.27 மணியளவில் பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் விஜயவாடா சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்தும், சந்திரபாபு நாயுடுவும் நீண்ட கால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.