மின் நெருக்கடி குறித்து மத்திய அரசுக்கு அமைச்சர் அதிஷி கடிதம்

83பார்த்தது
மின் நெருக்கடி குறித்து மத்திய அரசுக்கு அமைச்சர் அதிஷி கடிதம்
நாட்டின் தலைநகரான டெல்லியில் கடும் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நகரின் பல இடங்களில் கடுமையான மின்வெட்டு காரணமாக மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், சமூக வலைதளங்களில் புகார்கள் அதிகரித்துள்ளன. இதனால் பதற்றமடைந்த ஆம் ஆத்மி அரசு இப்பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி, டெல்லியில் நிலவும் மின் நெருக்கடி குறித்து விளக்கி மத்திய மின்துறை அமைச்சர் கட்டாருக்கு கடிதம் எழுதினார். இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

டேக்ஸ் :