யூடியூபர் VJ சித்து மீது போலீசில் புகார்.. வீடியோ

யூடியூபர் VJ சித்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பயிற்சி வழக்கறிஞர் ஷெரின் சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். போக்குவரத்து விதிகளை மதிக்காமலும், அஜாக்கிரதையாகவும், செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது யூடியூப் சேனலில் தகாத வார்த்தைகளை பேசி தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றுவதாக புகார் அளித்துள்ளார். தமிழ் யூடியூபர்களில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ள VJ சித்து மீது இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி