கள்ளக்காதலனுடன் தற்கொலை செய்துகொண்ட பெண்

10074பார்த்தது
கள்ளக்காதலனுடன் தற்கொலை செய்துகொண்ட பெண்
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள எழில் நகர் 5வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் செல்ஃபியா மேரி. இவருக்கு திருமணம் ஆகி 5 வயதில் குழந்தை உள்ளது. இவருக்கு செம்மஞ்சேரியை சேர்ந்த விஜய் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. விஜய்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 வயதில் குழந்தை உள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு தங்களது குழந்தைகளை விட்டுவிட்டு தனியாக வீடு எடுத்து கணவன் மனைவி போல் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் எங்கள் குடும்பத்தினர் என்னையும் விஜய்யையும் சேர்ந்து வாழ விடமாட்டார்கள். நாங்கள் சாகப்போகிறோம் என தனது தோழிக்கு குறுந்செய்தி அனுப்பிவிட்டு மேரி மற்றும் விஜய் தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி