புதிய குற்றவியல் சட்டங்கள்: ப.சிதம்பரம் விமர்சனம்!

பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வந்த 3 குற்றவியல் சட்டங்களை மாற்றி புதிய குற்றவியல் சட்டங்களை பாஜக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இது குறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்,” புதிய குற்றவியல் சட்டங்களில் சில அம்சங்களை வரவேற்கலாம். ஆனால் இந்த சட்டங்கள் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களின் நகலே தவிர வேறொன்றும் இல்லை. குற்றவியல் நீதியின் நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதே இதன் முதல் நோக்கமாக இருக்கும். அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கு இணங்க 3 சட்டங்களில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்கிற கட்டாயம் உருவாகும்” என அவர் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்தி