காவாலா பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட யானை (வீடியோ)

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் ஜெயிலர். இந்த படத்தில் நடிகை தமன்னா காவாலா என்ற பாடலுக்கு அசத்தல் நடமாடியிருப்பார். அனிருத் இசையில் வெளியான இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரல் ஹிட்டடித்தது. இந்நிலையில் இந்த பாடலுக்கு யானை ஒன்று குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அது எப்படி யானை டான்ஸ் ஆடும் என இந்த வீடியோவை பார்த்தவர்கள் வியந்துள்ளனர். அதாவது யானை போன்ற பொம்மை ஒன்றிற்குள் இருவர் நின்று இந்த நடனத்தை ஆடியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி