'ரெமல்' புயல் உருவாக தாமதம்: காரணம் என்ன?

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன் தினம், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைக் கொண்டிருந்தது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக உருவாகும் என கூறப்பட்டது. ’ரெமல்' என பெயர் வைக்கப்பட்ட இந்த புயல் வலுப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி வடக்கிழக்கில் மெதுவாக நகர்ந்து இன்று (மே 25) மாலை புயலாக வலுப்பெறும். பிறகு நாளை இரவு தீவிர புயலாக மாறி கரையை கடக்கும்.

தொடர்புடைய செய்தி