திமுக மகளிர் அணி தலைவியின் மகள் காலமானார்

53பார்த்தது
திமுக மகளிர் அணி தலைவியின் மகள் காலமானார்
திமுக மகளிர் அணி தலைவி விஜயா தாயன்பனின் மகள் தேவிகா ஸ்ரீதரன் காலமானார். அமெரிக்காவில் வசித்து வந்த தேவிகா ஸ்ரீதரன், கடந்த 17ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள தேவிகா ஸ்ரீதரன் உடலுக்கு இன்று (மே 25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

திமுக துணை பொது செயலாளர் கனிமொழி, அமைச்சர் எ.வ.வேலு, எம்.பி., ஆ.ராசா, இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரும் தேவிகா ஸ்ரீதரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி