கள்ளச்சாராயம்: யாருக்கும் இரக்கம் காட்ட வேண்டாம்

கள்ளச்சாராய விவகாரத்தில் யாருக்கும் இரக்கம் காட்ட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதோடு அதிக வழக்குகளும் பதிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி