கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சோப்பில் மிதித்து வழுக்கி விழுந்த பெண் படுகாயமடைந்தார். டி.ஜே.ஹள்ளி காவல்நிலைய பகுதிக்கு உட்பட்ட கனக்நகரை சேர்ந்த ரூபாய் (27) என்ற பெண், தனது வீட்டின் மூன்றாவது தளத்தில் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்ததார். அப்போது, தரையில் கிடந்த சோப் மீது மிதித்ததில் வழுக்கி கட்டிடத்தின் மேல் இருந்து கீழே விழுந்தார். அவர் கீழே விழுந்தபோது உடனிருந்த கணவர் அப்பெண்ணைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கோமாவில் உள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.