சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு!

63பார்த்தது
சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்கக் கோரி கேள்வி நேரத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், சபாநாயகர் அனுமதி அளிக்காததால் பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விஷச்சாராயத்தால் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மக்களுடைய உயிர்ப் பிரச்சனை என்பதால் பேச அனுமதி கோரினோம். ஹோமிபிசோல் மருந்து எங்கே என்று கேட்டால், ஓமிபிரசோல் என்கிறார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.

அமைச்சர் கூறும் ஓமிபிரசோல் மருந்து அல்சருக்கு கொடுக்கக்கூடியது. கள்ளச்சாராயம் குடித்துதான் இறந்தார்கள் என ஆட்சியர் கூறியிருந்தார் இன்று பலரது உயிரை முன்கூட்டியே காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அதனை திசை திருப்பி வதந்தி என்று கூறினர். இந்த அரசின் கையாலாகததனத்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என சாடினார்.

தொடர்புடைய செய்தி