இந்தியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே

50பார்த்தது
இந்தியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே
முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வீழ்த்தியது. 116 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஜிம்பாப்வே அணியின் பௌலர்கள் அடுத்தடுத்து அதிர்ச்சியளித்தனர். இந்திய அணி 19.5 ஓவரில் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட்டானது. அதிகப்பட்சமாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 31, வாஷிங்டன் சுந்தர் 27 ரன்கள் எடுத்தனர். ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா மற்றும் சட்டாரா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி