தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் திருடர்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. சமீபத்தில் டெல்லியின் மோதி நகரில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. பாடசாலை மாணவி ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது மாணவியின் சட்டைப்பையில் இருந்த கைபேசியை திருடிய இளைஞர் ஒருவர் பிடிபட்டுள்ளார். திருடனை கடுமையாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.