உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானது. அதே நேரம் யாரெல்லாம் உடற்பயிற்சி செய்யக்கூடாது என காண்போம். காய்ச்சல் இருக்கும் நாட்களில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் உடல் ஏற்கனவே சோர்வாகக் காணப்படும். உடலில் ஏதாவது அறுவைசிகிச்சை நடந்திருந்தால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் உடற்பயிற்சி செய்யவே கூடாது. ஏற்கனவே நமது வாழ்க்கைமுறை உடலுக்கு அதிகம் வேலை தருவது போல் இருந்தால், உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை.