“என் தலைவர் நீங்கள்தான்” அண்ணனை வாழ்த்திய பிரியங்கா.!

65பார்த்தது
“என் தலைவர் நீங்கள்தான்” அண்ணனை வாழ்த்திய பிரியங்கா.!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அவரது தங்கை பிரியங்கா காந்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “வாழ்க்கை குறித்தும், பிரபஞ்சம் குறித்தும் தனித்துவமான கண்ணோட்டம் கொண்ட எனது அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீங்கள் எப்போதும் என்னுடைய நண்பர், என் வாழ்க்கையின் சக பயணி, வழிகாட்டி, தத்துவவாதி மற்றும் தலைவர். இதேபோல் ஜொலித்துக் கொண்டே இருங்கள். உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி