நாளந்தா பல்கலை.யில் புதிய வளாகத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

83பார்த்தது
நாளந்தா பல்கலை.யில் புதிய வளாகத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
பீகார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தில் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் 17 நாடுகளின் தூதர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, நாளந்தா பல்கலைக்கழகத்தில் உள்ள பழங்கால இடிபாடுகளை பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாளந்தாவின் பழங்கால இடிபாடுகள் உள்ள இடத்திற்கு அருகே புதிய வளாகம் நிறுவப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் சோலார் மின் உற்பத்தி, குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி