நீங்கள்தானே என்னை தோற்கடித்தீர்கள்.. முன்னாள் முதல்வர் நெகிழ்ச்சி!

83பார்த்தது
ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது அரசியல் முதிர்ச்சியை எளிமையாக காட்டி நெகிழ்ச்சியடைய செய்துள்ளார். நடந்து முடிந்த ஒடிசா சட்டமன்ற தேர்தலில் ஹிஞ்சலி மற்றும் காந்தபாஞ்சி தொகுதிகளில் போட்டியிட்ட நவீன் பட்நாயக், காந்தபாஞ்சியில் பாஜக வேட்பாளர் லக்ஷ்மன் பாக் என்பவரிடம் தோல்வியடைந்தார். இருப்பினும், நேற்று செவ்வாய்க்கிழமை சட்டசபையில் ஹிஞ்சலி எம்.எல்.ஏ.வாக பதவியேற்று நவீன் பட்நாயக் வெளியேறும் போது லக்ஷ்மன் பாக் எழுந்து வணங்கினார்.

நவீன் பட்நாயக்கும் அவரை வாழ்த்தினார். அப்போது நவீன், "என்னை தோற்கடித்தது நீங்கள்தானே. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி