தம்பியின் காதலை சேர்த்து வைத்த யோகி பாபு

75பார்த்தது
தம்பியின் காதலை சேர்த்து வைத்த யோகி பாபு
நடிகர் யோகி பாபுபின் தம்பி விஜயனின் திருமணம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திடீரென நடந்தது. முன்னறிவிப்பு இல்லாமல் நடந்த இந்த திருமணத்தின் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆகவேண்டும் என்கிற கனவில் இருப்பவர் விஜயன். இப்படியான நிலையில் விஜயனுக்கும் பேஸ்புக் வழியாக மைசூரைச் பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர் படுகா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இருவரின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதற்கு யோகி பாபுவே பெண் வீட்டாரை நேரில் சந்தித்து இந்த திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார். இருவீட்டாரின் முன்னிலையில் கடந்த ஜூன் 3ஆம் தேதி இந்த திருமணம் யோகிபாபுவின் சொந்த ஊரான செய்யாறில் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி