தெலங்கானா மாநிலத்தில் ஓடும் ரயில் கழிவறையில் வைத்து 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 20 வயது சகபயணி கைது செய்யப்பட்டார். சிறுமி தனது குடும்பத்தினருடன் ரயிலில் பயணித்தார். அப்போது தெலுங்கானா நோக்கி ரயில் வந்தபோது, சிறுமி கழிவறைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாக நோட்டமிட்ட சக பயணி பின்தொடர்ந்து சென்று கழிவறையில் வைத்து அவரை பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்துள்ளார். சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.