ட்ரோன் தாக்குதலில் சிக்கி 30 பேர் பலி

53பார்த்தது
ட்ரோன் தாக்குதலில் சிக்கி 30 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள எல்-ஃபாஷரில் உள்ள ஒரு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் கிட்டத்தட்ட 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உடல்கள் மீட்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏப்ரல் 2023 முதல் சூடானில் இராணுவத்திற்கும் துணை ராணுவப் படைகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி