அதிபர் இறப்பை பட்டாசு வெடித்து கொண்டாடிய பெண்கள்.!

1063பார்த்தது
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் ஈரானைச் சேர்ந்த பெண்கள் பலரும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு ஹிஜாப் சரியாக அணியவில்லை என்கிற காரணம் காட்டி 22 வயது பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தது ரைசி அரசு. அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் பழமைவாதியும், சர்வாதிகாரியுமான ரைசியின் மரணம் கொண்டாடப்பட வேண்டும் என ஈரான் பெண்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி