உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராஜு (45) - ராஜேஸ்வரி (36) தம்பதி. இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி வீட்டை விட்டு சென்ற ராஜேஸ்வரி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ராஜு போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ராஜுவின் வீடு இருக்கும் பகுதிக்கு அடிக்கடி நான்ஹே பண்டிட் (45) என்ற நபர் பிச்சை எடுக்க வருவார். அவருக்கும் ராஜேஸ்வரிக்கும் தொடர்பு இருக்கிறது. நான் எருமை மாடு விற்ற பணத்தை எடுத்துக்கொண்டு இருவரும் ஓடிவிட்டனர் என கூறியுள்ளார்.