காதலனுடன் தீக்குளித்த பெண் உயிரிழப்பு

572பார்த்தது
காதலனுடன் தீக்குளித்த பெண் உயிரிழப்பு
மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி தன் மீதும் காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலி சிந்துஜா. மருத்துவமனையில் இருவரும் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், கடந்த மே 14-ம் தேதி சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிந்துஜா, வேறு ஒரு பெண்ணுடன் ஆகாஷ் பழகிய ஆத்திரத்தில் இப்படி செய்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார். இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கல்லூரி மாணவி சிந்துஜாவும் சிகிச்சை பலனின்றி இன்று(மே 21) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி