தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூலில் உள்ள பெத்தமுடுனூர் கிராமம் அருகே சாலையில் கார் ஒன்று அதிவேகமாக சென்றது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நடந்து சென்ற பெண்ணின் மீது மோதியது. மோதிய வேகத்தில், அந்த கார் மூன்று முறை சுழன்று கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கார் ஓட்டுநர் காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி தற்போது வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.