நடிகரும், தேமுதிக தலைவருமான
விஜயகாந்த் டிச.28ம் தேதி காலமானார். விஜயகாந்த்திற்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விஜய பிரபாகரன், இளைய மகன் சண்முக பாண்டியன். இதில் சண்முக பாண்டியன் இயக்குநர் சசிகுமார் இயக்கத்தில் ‘குற்றப்பரம்பரை’ என்ற வெப்சீரிஸில் நடிக்க இருந்தார். இதற்காக எடுக்கப்பட்ட டெஸ்ட்ஷூட் படங்களையும் பார்த்து
விஜயகாந்த் மகிழ்ந்துள்ளார். ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே
விஜயகாந்த் மறைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.