இந்தியாவில் தற்போது இரண்டு விதமான ரூ.5 நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. ஒன்று பித்தளை வடிவிலும், மற்றொன்று தடிமனான உலோகத்திலும் வெளியிடப்படுகிறது. தடிமனான உலோகத்திலான ரூ.5 நாணயங்களின் உற்பத்தியை குறைக்க உள்ளனர். இதை உருவாக்க 4 அல்லது 5 உலோக பிளேடுகள் பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் செலவு அதிகமாவதாகவும் கூறப்படுகிறது. எனவே பித்தளையால் உருவாக்கப்பட்ட நாணயங்களை புழக்கத்தில் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.