தற்போது சந்தைகளில் தேங்காய் பூக்கள் அதிகமாக கிடைக்கின்றன. இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் முதுமை தோற்றம் வராமல் தடுக்கும். வயது முதிர்வால் ஏற்படும் தோல் சுருக்கம் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கும். தைராய்டு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இது நிவாரணம் தருகிறது. கலோரி குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதயக் குழாய்களில் படியும் கொழுப்பை நீக்குகிறது. உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, சிறுநீரகத்தையும் பாதுகாக்கிறது.