அத்திக்காயை வைத்து சுவையான பருப்பு கூட்டு செய்யலாம். வாணலியில் எண்ணெய் சூடானதும் காய்ந்த மிளகாய், பெரிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய அத்திக்காய், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். நன்றாக வெந்ததும் வேகவைத்த பாசிப்பருப்பு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அனைத்தும் நன்றாக வெந்ததும் இறக்கவும். சுவையான அத்திக்காய் கூட்டு தயார். இதை சப்பாத்தி, தோசை, இட்லி, சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.