சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் 2024-25ஆம் ஆண்டில் 59 ஆண்கள் மட்டுமே குடும்பநல அறுவை சிகிச்சை செய்துகொண்டனர். ஆண்கள் நவீன குடும்ப நல கருத்தடை செய்து கொள்வதற்கு பெண்களே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது கணவருக்கு வேண்டாம் நாங்கள் கருத்தடை செய்து கொள்கிறோம் என பெண்கள் கூறுவதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.