'ஒரே நாடு ஒரே தேர்தல்' சட்டத்திருத்த மசோதாக்களை மக்களவையில் இன்று (டிச. 16) தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் இன்றைய அலுவல் அட்டவணையில் இருந்து மசோதாக்கள் நீக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சபாநாயகர் அனுமதியுடன் கடைசி நேரத்தில் துணை பட்டியல் மூலம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அடுத்த வாரத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.