மதுரை மாவட்டத்தில் நாயின் காலில் பேருந்தை ஏற்றிய விவகாரத்தில், அரசு பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஓட்டுநர் நமச்சிவாயம் என்பவர் திருமங்கலம் - சோழவந்தான் வழித்தடத்தில் அரசு பேருந்தை இயக்கி வந்தார். அப்போது திடீரென சாலையில் குறுக்கே வந்த நாயின் மீது பேருந்தை ஏற்றினார். இது தொடர்பாக மதுரை மண்டல போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.