திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே தனது மனைவியின் தங்கை குளிப்பதை செல்போனில் வீடியோ எடுக்க முயன்ற நாட்றம்பள்ளியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சதீஷ் (30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் பல பெண்களின் குளியல் வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.