குளிர் காலத்தில் நாய்களுக்கு குளியல் கட்டாயம் தேவைப்படும். நாய்கள் உடலின் தோன்றும் துர்நாற்றம், அவற்றின் தோல் மீது உருவாகும் இயற்கையான நாற்றங்கள், நக்குவதால் ஏற்படும் துர்நாற்றம், ரோமங்களின் நிறமாற்றம் ஆகிய காரணங்களால் நாய்களை குளிக்க வைக்க வேண்டும். மாதம் ஒருமுறை அல்லது தேவைப்படும் நேரத்தில் குளிப்பாட்டலாம் அல்லது 2 வாரங்களுக்கு ஒரு முறை உலர் குளியல்களை தேர்வு செய்து குளிக்க வைப்பது அதன் தோல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு உதவியாக இருக்கும்.