இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு அடுத்தாண்டு முதல் அனுமதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் இந்தியர்கள் இ-விசாக்கள் மூலம் ரஷ்யாவில் அனுமதிக்கப்படுகின்றனர். சீனா, ஈரான் நாட்டவர்கள் விசா இன்றி ரஷ்யாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட திட்டம் வெற்றியடைந்த நிலையில், இந்தியர்களுக்கும் அந்தச் சலுகை வழங்கப்படவுள்ளது. தற்போதைய நிலவரப்படி 62 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்.