ம.பி: பிச்சைக்காரர்கள் இந்தூர் நகரத்தின் தூய்மையைக் கெடுப்பதாகக் கருதிய அம்மாவட்ட நிர்வாகம் அவர்களை ஒழிக்க, பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்தூர் மாவட்ட ஆட்சியர் ஷிஷ் சிங், "இந்தூரில் பிச்சை எடுப்பதைத் தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜன.1 முதல் யாராவது பிச்சை போடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.