மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை - கீழக்குடி சந்திப்பில் இருசக்கர வாகனமும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் துரையரசன் (20) என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை வளைவில் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயற்சித்தபோது எதிரே வந்த பேருந்து மீது பைக் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.