பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கும் நிலையில், கூட்டணி விஷயத்தில் தவறு செய்துவிட்டோம் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் உரையாற்றிய ராமதாஸ், "கூட்டணி விஷயத்தில் நாம் தவறு செய்துவிட்டோம், அந்தத் தவறை தொடர வேண்டியது இல்லை. 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.