பாமக தலைவர் அன்புமணி தனி அலுவலகம் தொடங்கியுள்ளதாக அறிவித்தார். புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் பேசிய அன்புமணி, பனையூரில் நான் புதிதாக தொடங்கியுள்ள அலுவலகத்தில் என்னை வந்து சந்திக்கலாம் என்று கூறிய அவர் மேடையிலேயே தொலைபேசி எண்ணையும் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, தனி அலுவலகம் திறந்து கொண்டு நடத்த வேண்டும் என்றால் நடத்திக் கொள் என்று அன்புமணியை நோக்கி ராமதாஸ் ஆவேசமாக கூறியுள்ளார்.