டெலிகாம் நிறுவனங்களின் கட்டணங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிதிச் சேவை நிறுவனமான Motilal Oswal தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், 2025 டிசம்பரில் ரீசார்ஜ் கட்டணம் 15% வரை உயர்த்தப்படலாம். ARPU அளவை அதிகரிக்க இனிமேல் இந்த நடைமுறை அடிக்கடி மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. நிதியாண்டு 25 இல் தொலைத்தொடர்பு துறையின் வருவாய் ரூ.67,400 கோடியாக உயர்வடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.