பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்த நிர்வாகியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. புதுச்சேரியில் நடைபெறும் பாமக சிறப்பு பொதுக்குழுவில் பேசிய ராமதாஸ், "இது நான் உருவாக்கிய கட்சி. இங்கு நான்தான் முடிவெடுப்பேன். விருப்பமில்லை என்றால் விலகிக் கொள்ளலாம்" என்று அன்புமணியை எச்சரித்துள்ளார்.