அமெரிக்கா: கலிபோர்னியாவை சேர்ந்தவர் பெட்ரோ ஆர்டெகா (26). இவர் செல்லமாக வளர்த்து வந்த மூன்று அமெரிக்கன் புல்லி நாய்கள் அவரை கடித்ததில் தனது 4 வயது மகன் கண்முன்னே அண்மையில் உயிரிழந்தார். தாக்குதலுக்கு ஆளாகி ரத்த வெள்ளத்தில் கிடந்த பெட்ரோவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனிடையில் 3 நாய்களும் கருணைக்கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.