சந்தனத்தை வைத்து படம் தயாரிக்கும் ஆர்யா?

79பார்த்தது
சந்தனத்தை வைத்து படம் தயாரிக்கும் ஆர்யா?
சந்தானம் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன படங்களில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படமும் ஒன்று. இந்தப் படத்தின் அடுத்தப் பாகத்தை தான் நடிகர் ஆர்யா தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் காமெடி இப்போது வரையிலும் ரசிக்கப்படுகிறது. இந்த நட்பின் அடிப்படையிலேயே தன் நண்பனை வைத்து ஹிட் ஆன ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் அடுத்த பாகத்தைத் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் ஆர்யா. இதில் இவரும் கெஸ்ட் ரோலில் நடிப்பார் எனத் தெரிகிறது. விரைவில் இதுகுறித்தான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய செய்தி