மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக உள்ள பெ.சண்முகம் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில் பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.