சென்னை போரூரில் அமைந்துள்ள பிரபலமான தனியார் உணவகத்தில் நேற்று (ஜன. 04) வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைன் செயலி மூலம் சிக்கன் வாங்கியிருக்கிறார். சிக்கனை சாப்பிட பிரித்த போது அதன் உள்ளே புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து உணவகத்திற்கு நேரில் சென்ற வாடிக்கையாளர், உரிமையாளருடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் வீடியோ ஆதாரத்துடன் தேசிய உணவு பாதுகாப்பு துறையில் புகாரளித்துள்ளார்.