ஜப்பானை சேர்ந்த உலகின் வயதான நபர் டோமிகோ இடூகா (Tomiko Itooka) தனது 116வது வயதில் காலமானார். கடந்த டிச. 29ஆம் தேதி அவர் உயிரிழந்த நிலையில் அது குறித்து நேற்று (ஜன. 04) அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆகஸ்ட்-இல் ஸ்பெயினின் மரியா பிரான்யாஸ் மோரேரா 117 வயதில் இறந்த பிறகு இடூகா உலகின் வயதான நபராக அங்கீகரிக்கப்பட்டார். மறைந்த இடூகாவுக்கு 4 பிள்ளைகளும், 5 பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.