உலகம் முழுவதும் 387 நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறித்த விவரங்களை டாம் டாம் என்கிற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் பெங்களூரு முதல் இடத்திலும், 2-ம் இடத்தில் புனேவும் உள்ளன. இந்த பட்டியலில் டெல்லி 12-வது இடத்தை பிடித்துள்ளது. மும்பைக்கு இந்த பட்டியலில் 14-வது இடம் கிடைத்துள்ளது. பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆண்டுக்கு ஒரு நபருக்கு 132 மணி நேரம் வீணாவதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.