இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.8,000-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 1959-ல் வாங்கப்பட்ட நகைக்கடை பில் ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அந்த பில்லில் ஒரு தோடா தங்கம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு தோடா என்பது 11.66 கிராம் ஆகும். ஒரு தோடா தங்கத்தின் விலை ரூ.113 என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை வைத்துப் பார்த்தால் 1959-ல் ஒரு கிராம் தங்கத்தின் விலை தோராயமாக ரூ.10 முதல் ரூ.11 வரையை இருந்துள்ளது.