கணவன் நாக்கை கடித்து துப்பிய மனைவி

80பார்த்தது
கணவன் நாக்கை கடித்து துப்பிய மனைவி
ராஜஸ்தான்: ஜலாவர் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது கணவனின் நாக்கை கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்ஹாயலால் சைன் (25) - ரவினா சைன் ஆகிய இருவருக்கும் ஒன்றரை வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமானதில் இருந்து இருவருக்கும் ஓயாமல் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி ஏற்பட்ட குடும்பத்தகராறில் கன்ஹாயலாலின் நாக்கை ரவினா கடித்து துப்பியுள்ளார். இதையடுத்து, கன்ஹாயலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ரவினா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி