கோட் படம் மூன்று மணி நேரம் ஏன்? வெங்கட் பிரபு விளக்கம்!

58பார்த்தது
கோட் படம் மூன்று மணி நேரம் ஏன்? வெங்கட் பிரபு விளக்கம்!
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள 'கோட்' வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீசாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி 'கோட்' படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கூறியதாவது, "முதலில் 3 மணி நேரம் படம் என்பது எங்களுக்குமே சிறிது பயமாக இருந்தது. 3 மணி நேரமாக இருந்தாலும் படம் சுவாரசியமாக இருக்கும். இனிமேல் விஜய் நடிக்க போவதில்லை என்பதால் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி